சிவன் ஆலய தேர் திருவிழா 14/07/2026
Translate
செவ்வாய், 14 ஜூலை, 2026
ஞாயிறு, 14 செப்டம்பர், 2025
திங்கள், 21 ஜூலை, 2025
சனி, 21 டிசம்பர், 2024
கி.பி.1782 ல் சென்னை ராயபுரத்தில் ஒரு" அன்ன சத்திரம்" இருந்தது .(இருக்கிறது) அது கட்டியவரின் பெயரில் இல்லாது, அவரது தொழிலின் பெயரால்" மணியக்காரர் சத்திரம் " என்று அழைக்கப்பட்டது.
வெள்ளி, 15 நவம்பர், 2024
புங்கை மரம் மருத்துவ பயன்கள்
புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது சுரஞ்சகம் (Millettia pinnata) என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது
இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாக பயன்தருகிறது.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான்.
புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.
புங்கை மரப் பட்டை பயன்கள்:
புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
புங்கை இலை பயன்கள்:
புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது.
புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும்.
புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்.
புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.
புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.
புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.
புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணமாகும்..
புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடால் நிவாரணம் உண்டு..
இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கஷாயம் பெரி-பெரி நோயை குணப்படுத்தும்.
புங்கன் இலை, புளியிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பிலை, பொடுதலை, உத்தாமணி, கறிவேப்பிலை, நாரத்தை இலை, சங்கச்செடி இலை, அவுரி இலை, பொன்னாவாரை இலை இவைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு கொதிக்க வைத்து அதில் கடுகுரோகிணி, இந்துப்பு இவற்றை துணியில் சிறு பொட்டலங்களாகக் கட்டி கொதிக்க வைத்த நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கியவுடன் வடிகட்டி மாந்த நோய்களுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
புங்க மரத்தின் இலைகள் ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம்.
புங்க இலையை பயன்படுத்தி உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும். தலையில் பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும்.
புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது.
புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது.
புங்க எண்ணெய் பயன்கள்:
புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன் பளபளக்கச் செய்யும். தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.
புங்க எண்ணெய், பரங்கி பட்டை சூரணம் ஆகியவற்றை தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசினால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்.
புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும்.
புங்க எண்ணெய், வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.
தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வர மேற்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.
புங்கம் வேர் பயன்கள்:
புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.
புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.
புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
புங்கம் பூ பயன்கள்:
இதன் மலர்கள் நீரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.
புங்கன் பூவை தேவையான அளவு எடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடி செய்து அரை அல்லது 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும்.இதை எடுத்துக் கொள்ளும் நேரம் மட்டும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை நீக்க வேண்டும்.
பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.
புங்கம் பூ, புளியம்பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி என வகைக்கு 35 கிராம் எடுத்து 3/4 லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவினால் அவை எளிதில் குணமாகும்.
புங்கன் விதை பயன்கள்:
இதன் விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது. எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும்.
தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும். புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும்.
இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும். வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும்,
மேலும் பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும்.
அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும்.
புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி
அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி-யுங்கட்கும்
காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்
பூட்டுப்பங் கின்வாய்வும் போம்
- அகத்தியர் குணபாடம்.
புதன், 22 மே, 2024
களத்துப் பூஜை
களத்துப் பூஜை
செவ்வாய், 2 ஜனவரி, 2024
*குருகுல வித்யா கேந்திராவின்* *இறை அறம்* *சித்த* *மருத்துவ பயிற்சி வகுப்புகள் 2 ஆண்டுகள்*
*குருகுல வித்யா கேந்திராவின்* *இறை அறம்* *சித்த* *மருத்துவ பயிற்சி வகுப்புகள் 2 ஆண்டுகள்*
https://chat.whatsapp.com/DWssaiHUDpW2MMvyMlEbjD
🪷 *சித்தமருத்துவ இளநிலை வகுப்புகள்*
🪷 *இடைநிலை சித்தமருத்துவ வகுப்புகள்*
🪷 *சித்தமருத்துவ முதுநிலை வகுப்புகள்*
என மூன்று பிரிவாக வகுப்புகள் நடத்தப்படும்.
💐 *கட்டணம்:*
வகுப்பிற்கான கட்டணம் பிரதி மாதம் *ரூபாய்* *2000 /-* ஆகும்.
💐 60 நாட்களுக்கு ஒரு முறை நேரடி கலந்தாய்வு வகுப்பு நடத்தப்படும் .
இதில் பல உடனடியாக பயன் தரக்கூடிய தனித்துவம் வாய்ந்த உயர்தர மருந்துகளை செய்ய கற்றுத்தரும் செய்முறை வகுப்பாக அமையும். இங்கு செய்த மருந்தினை நீங்கள் எடுத்துச் செல்லும் தளமாகவும் அமைகிறது. இதற்கு தனி கட்டணம் உண்டு.
💐 கல்வி தகுதி பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் சித்த மருத்துவத்தின் மீது ஈர்ப்பும் ஆர்வமும் வேண்டும்.
💐வயது வரம்பு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இணைந்திடலாம்.
💐விருப்பம் உள்ளவர்கள் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
புதன், 13 டிசம்பர், 2023
தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த சுடுமண் பொருள்
வெள்ளி, 23 ஜூன், 2023
ஞாயிறு, 5 ஜூன், 2022
நிறங்கள் (Colour) தமிழ்ப் பெயர்
#நிறங்கள் (Colour) தமிழ்ப் பெயர் !
தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்த நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.
நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக நிறங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.
அடர் சிவப்பு – cramoisy
அடர் நீலம் - perse / smalt
அடர் மஞ்சள் - gamboge
அயிரை/ அசரை - sandy colour
அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic
அருணம் - bright red, colour of the dawn;
அவுரி(நிறம்) - indigo
அழல் நிறம் – reddish colour of fire
ஆழ் சிவப்பு - cinnabar
ஆழ் செந்நீலம் (ஊதா) - claret
ஆழ் பழுப்பு - brunneous
ஆழ் பைம்மஞ்சள் - citrine
ஆழ்சிவப்பு - cramoisy
ஆழ்நீலச் சிவப்பு – aubergine
இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous
இருள் சிவப்பு - puccoon
இருள்சாம்பல் - slate
இள மஞ்சள் - flavescent / primrose
ஈய(ம்) (நிறம்) - plumbeous
ஈரல்நிறம் - Dark red colour, purple colour
உறைபால்(நிறம்) – whey
எண்ணெய்க்கறுப்பு – dark black colour
எலுமிச்சை ம் - citreous
ஒண்சிவப்பு - cardinal
ஒளிர் செஞ்சிவப்பு - phoeniceous
ஒளிர் செம்மை - coccineous
ஒளிர் வெண்கலம் – aeneous
ஒளிர் வெண்கலம் (நிறம்) - aeneous
ஒளிர்சிவப்பு - puniceous
ஒளிர்மஞ்சள் - sulphureous / vitellary
கசகசாச் சிவப்பு - ponceau
கடல்நீல (நிறம்) - ultramarine
கடற்பச்சை - cerulean
கத்தரிநீலம் - periwinkle நித்திய கல்யாணி
கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour;
கரு (நிறம்) - sable
கருஞ்சிவப்பு - porphyrous/purpureal
கரும்பச்சை – corbeau
கருமை - nigricant / nigrine
காயாம்பூ (நிறம்) - purple colour
காளிமம் - black colour
கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour
குங்குமச் சிவப்பு- vermeil
குங்குமப்பூ(நிறம்) - croceate / saffron
குரால் - Dim, tawny colour;
குருதிச்சிவப்பு - erythraean / sanguineous / incarnadine
குருதிச்செம்மை - vermilion
கோமேதக(நிறம்) -topaz
சருகிலை (நிறம்) - filemot
சாம்பல் – cinerious
சாம்பல் பச்சை - caesious / sage
சாம்பல் மஞ்சள - isabelline
சுடர் (நிறம்) – flammeous
சுடுமண்(நிறம்) - terracotta
சுதை வெண்மை - cretaceous
செக்கர் – reddish sky
செங் கருநீல(நிறம்) - violet / violaceous
செங்கருப்பு - piceous
செங்கல்மங்கல் - Dim red colour
செங்கற்சிவப்பு - lateritious / testaceous
செந்தீவண்ணம் - colour of glowing fire
செந்தூரச்சிவப்பு – minium
செப்புநிறம் - Dark-red colour
செம்பட்டை - Brown colour of hair
செம்பவளம் - deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு
செம்பழுப்பு - sinopia/ sorrel
செம்பு - Copper colour;.
செம்பூச்சி - kermes
செம்பொன் - titian
செம்மஞ்சள் -jacinthe
செவ்வல் (செந்நிறம்) - Redness;
சோணம் - Red colour, crimson colour
தசை (நிறம்) - sarcoline
தவிட்டுநிறம் - Brown, dun colour
திமிரம் – Colour ofDarkness
தும்பை நிறம் - pure white colour
துமிரம் - Deep red colour .
துரு (நிறம்) – ferruginous
துருச் சிவப்பு - rubiginous
துவர் (சிவப்பு) - Scarlet Red colour,
துவரி (காவிநிறம்) - Salmon colour
தூயபழுப்பு - sepia
தெள்ளுப்பூச்சி (நிறம்) - puce
நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn
நல்சிவப்பு – coquelicot
நறுமஞ்சள் - lutescent
நன்மஞ்சள் - luteolous
நன்னிறம் - White colour
நீல (நிறம்) – azuline
நீல மணி - sapphire
நீலச்சாம்பல் - glaucous / cesious / gridelin / lovat
நீலச்சிவப்பு – amaranthine / solferino
நீலப்பச்சை – turquoise / viridian
பச்சை – chlorochrous
பசுமை - virid
பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
பழுப்பு மஞ்சள் - fulvous
பழுப்புச் சிவப்பு - castaneous / rufous / russet / umber
பழுப்புச்சாம்பல் - greige / taupe
பளீர்சிவப்பு - stammel
பனிவெண்மை - niveous
பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) - Colour of a class of pearls, resembling that of toddy
பால்வண்ணம் – white colour
புகர் நிறம் - tawny / tan
புகைக்கரி – fuliginous
புள்ளிச் சாம்பல் - liard grey
புற்பச்சை - prasinous
புறவு (நிற) - columbine
பூஞ்சல் - Brown- ish colour; மங்கனிறம்
பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour;
பூவல்- Red colour
பைந்நீல(நிறம்) - teal
பைம்பொன் - chrysochlorous
பொன் மஞ்சள் - goldenrod
பொன்மஞ்சள் luteous
பொன்மை – aurulent
ப்யாரீப்ரியன் - அன்பின் அன்பன்
மகரம் - Pink colour
மங்கல் பழுப்பு - fuscous
மங்கல் பழுப்பு – khaki
மங்கல்பச்சை - eau-de-nil
மஞ்சள் – xanthic / icterine / icteritious
மஞ்சள் பச்சை – chartreuse / zinnober
மஞ்சள் பழுப்பு - lurid / ochre
மஞ்சள்சிவப்பு - wallflower
மணிச்சிவப்பு - rubious
மணிநிறம் - Dark blue colour, as of sapphire;
மயில்நீலம் - pavonated
மரகதப்பச்சை - smaragdine
மருப்பு (தந்தம்) - eburnean
மல்லிகை மஞ்சள் – jessamy
மாமை- dark-brown colour
முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime
முத்துச்சாம்பல் - griseous
வளர்பச்சை - virescent
வாதுமை (நிறம்) - ibis
வான் நீலம் - cyaneous
விண் நீலம் - celeste
விழி வெண்மை – albugineous
வெங்காயப் பச்சை - porraceous
வெண்சாம்பல் - hoary
வெண்மங்கல் - leucochroic
வெண்மஞ்சள் - ochroleucous
வெளிர் நீலம் - azure
வெளிர் பச்சை - celado
வெளிர் மஞ்சள் - nankeen
வெளிர் மஞ்சள் பச்சை - tilleul
வெளிர்நீலம் - watchet
வெளிர்பழுப்பு - suede
வெளுப்பு – albicant
வைக்கோல் (நிறம்) – stramineous
#ப்யாரீப்ரியன் மீள்பதிவு...
செவ்வாய், 26 ஏப்ரல், 2022
ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. இதில் எந்த மாதத்தில் இருந்து ஒரு தேதியை குறிப்பிட்டு, அதற்குரிய கிழமை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால்
*அனைத்து ஜோதிடர்கள், சமூக ஆர்வலர்களுக்கான கணக்கியல் பதிவு!* ********************************* *2022. ஆம் ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. இதில் எந்த மாதத்தில் இருந்து ஒரு தேதியை குறிப்பிட்டு, அதற்குரிய கிழமை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இனி காலண்டரையோ! ..... டைரியையோ! தேடி பார்க்க தேவையில்லை*. 🙏 *மிக மிக எளிமையான முறையில் தெரிந்துக் கொள்ள அரிய வாய்ப்பு!*🌹 *முதலில் 12 மாதங்களுக்கான. குறிப்பு எண்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.*🥱 *முதலாவதாக. ஜனவரிக்கு 6* *பிப்பிரவரிக்கு 2* *மார்ச்சுக்கு 2* *ஏப்ரலுக்கு 5* * *மே வுக்கு 0* *ஜுன் வுக்கு 3* *ஜூலைக்கு 5* *ஆகஸ்டுக்கு 1* *செப்டம்பருக்கு 4* *அக்டோபருக்கு 6* *நவம்பருக்கு 2* *டிசம்பருக்கு 4. 🌹 ஆகிய எண்களை மனதில் பதிய வைத்து கொள்வதோடு 🌺 எந்த மாதத்திலிருந்து எந்த தேதியை குறிப்பிட்டு கேட்டாலும் 🌺 அந்த எண்ணோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாதத்திற்குரிய எண்ணோடு தேதி எண்ணையும் கூட்டி 🌹 7 ஆல் வகுத்து மீதி 1 வந்தால் ஞாயிறு என்றும்* *2 வந்தால் திங்கள் எனவும், 4 வந்தால் புதன் எனவும், 5 வந்தால் வியாழன் என்றும் 6 வந்தால் வெள்ளி எனவும் மீதி வராமல் 0 என வந்தால் சனிக்கிழமை என ஆனி தரமாக சொல்லலாம்.*🇳🇪 *உதரணமாக ஆகஸ்டு 15 என்ன கிழமை என கேட்டால் .....?* *தேதி எண்ணோடு அதாவது 15 யோடு ஆகஸ்டு மாதத்திற்குரிய குறிப்பு எண் 1 ஐ கூட்டினால் 16 வரும். இதை 7 ஆல் வகுத்தால் மீதி 2 வரும். 2 க்குரிய கிழமை திங்கட்கிழமை என 3 விநாடிக்குள் சொல்லிவிடலாம்.*🌹 *இதேமாதிரி அக்டோபர் 2. இது என்ன கிழமை என, கேட்டால் தேதி 2 யோடு அக்டோபர் மாதத்திற்குரிய குறிப்பு எண் 6 ஐ கூட்டினால் 8 வரும் இதை 7 ஆல் வகுக்க மீதி 1 இது ஞாயிற்று கிழமை ஆகும். 🌺* *மேலும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 என்ன கிழமை என பார்த்தோமானால் தேதி 15 யோடு ஜூலை மாத குறிப்பு எண் 5 ஐ கூட்டினால் 20 வரும் இதை 7 ஆல் வகுக்க மீதி 6 வரும் இது வெள்ளிக்கிழமை என அடுத்த நொடியே தெரிந்துக்கொள்ளலாம்.*
வெள்ளி, 25 ஜூன், 2021
திருக்கோவிலூர் அருகே ஆதிச்சனூரில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்பதுக்கை
த
ழ
சனி, 18 ஜனவரி, 2020
சித்தர் மரபுக் குறியீட்டுப் பாறைத் தீட்டல் .
வீரபாண்டி சித்தர் குகை எழுத்து .
ககன்ய காய
கமன சித்தர் தக்கன்
அவ்வப்போது நண்பர்கள் புதிதாகக் கண்டுபிடித்த , படித்தறிய இயலாதத் தொல்லெழுத்துப் பொறிப்புகளை எனக்கனுப்பி படிக்கக் கேட்பார்கள் . அவ்வாறுதான் அண்மையில் 109 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பாபனாசம் சன்யாசிப்புடவு கல்வெட்டு என்னால் படிக்கப்பட்டது . இப்போது விழுப்பரம் மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து 9 கிமீ தொலைவிலுள்ள வீரபாண்டி என்னும் சிற்றூரிலிருந்து ஒரு அரிய கல்லெழுத்துப் பாறைத் தீட்டல் வந்துள்ளது . நண்பர் ஒரிசா பாலு அவர்களது நண்பர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர் . ஆசிரியர் சிலம்பரசன் என்னும் உள்ளூர்க்காரர் கண்டுபிடித்து விழுப்புரம் செங்குட்டுவன் வாயிலாக வந்துள்ளது . இதுகுறித்து சிற்றிங்கூர் ராஜா என்பவரது முகநூல்பதிவில் நான் முன்பு படித்துள்ளேன் . வீரபாண்டி ஏரிப் பகுதியில் உள்ள ஒரு பாறைக் குன்றின் இயற்கைக் குகைத்தளத்தில் வெள்ளை வண்ணத்தால் எழுதப்பட்டுள்ளது . அதுகுறித்தப் படங்களையும் இணைத்துள்ளேன் . முதல் பார்வையிலேயே இவை அழகுணர்வால் தீட்டப்படாமல் ஒரு நோக்கத்துடன் தீட்டப்பட்டிருப்பதை என் 50 ஆண்டுகாலப் பட்டறிவால் உணர முடிந்தது . வடிவங்களைப் பாறைகளில் கவனத்துடன் வரைந்துள்ளனர் . எனது 25 ஆம் வயதில் சிந்து எழுத்து வடிவங்களின் மீது கொண்ட ஆர்வம் , பின்னர் தமிழி எழுத்தின் மீதான விருப்பமாக வளர்ந்தது . அந்தப் பட்டறிவு தந்த உள்ளுணர்வே என்னை இன்றுவரை வழிநடத்திச் செல்கிறது . தற்போது வீரபாண்டி எழுத்துகளைப் படிக்கவும் உதவியுள்ளது என்றே நம்புகிறேன்
எனது ஆய்வுக் கருத்துகள் ஒவ்வொரு நாளும் உறுதிப்பட்டு வருவதும் , தமிழக எழுத்துச் சான்றுகள் மேலும் மேலும் தொன்மைக் காலத்தை நோக்கி நகர்ந்து சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்குமான இடைவெளி சுருங்கி வருவதும் இந்நாளில் மகிழ்ச்சியூட்டுகிறது . சிந்து நாகரிக எழுத்துகள் படிப்படியாக மாறி தமிழியாகும் மாற்றத்துக்கான சான்றுகள் குஜராத் பேட் துவாரகை எழுத்தில் தேடியது போக இப்போது தமிழகத்திலேயே கிடைத்து வருவதைக் காண்கிறேன் . அத்தகைய மாற்றத்தின் இறுதி நிலைகளைச் சன்யாசிப்புடவு வடிவங்களில் கண்டதுபோல , மாற்றத்தின் தொடக்கநிலை வடிவங்களை நான் திருக்கோயிலூர் அருகே உள்ள வீரபாண்டியில் காண்கிறேன் . சிந்துக்கும் நமக்குமான இடைவெளியைப் பானையோட்டு எழுத்து வடிவங்களுக்குப் பதிலாக சிந்து எழுத்துப் பொறிப்புகளே நிறைவு செய்யும் நிலையை அடைவது உறுதி என்றும் உணர்கிறேன் .
சிந்து நாகரிக அழிவிற்குப் பின்னரான அதன் எழுத்துத் தொடர்ச்சி சிந்து வெளியை ஒட்டிய எங்கும் கிடைக்காமல் அவை பானையோட்டு எழுத்துகள் , தமிழகச் சிந்து எழுத்து வடிவங்களாகத் தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன . இந்த வரலாற்றுச் சான்றுகளுக்குப் பின்னால் ஒரு வரலாற்று அடிப்படை இருப்பதால் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியான இந்திய வரலாற்றினைத் தமிழகத்திலேயே தேட வேண்டும் என்ற உண்மை நிறுவனமாகிறது . மேலும் , வீரபாண்டி பாறைத்தீட்டலுடன் தொடர்புள்ள இன்னொரு கருத்து அது விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை எழுத்து வடிவங்களுக்கு மிக அண்மையில் கிடைப்பதுமாகும் . வியப்பளிக்கும் இன்னொரு செய்தி நான் இதயத் தாக்குதலுக்கு ஆளாவதற்குச் சில மாதங்கள் முன்னரே கீழ்வாலையைப்பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதுவதாகத் திட்டமிட்டிருந்தேன் . அது இயலாமல் போனதால் முகநூலில் ஒரு விரிவான பதிவினைச் செய்வதற்கு நினைத்திருந்த போதுதான் நண்பர் ஒரிசா பாலு எனக்கு இப்பாறைப் பொறிப்பைப்பற்றியக் கோரிக்கை வைத்தார் . அதனை ஏற்று நான் மேற்கொண்ட ஆய்வே இப்போது நான் உங்கள் முன் படைப்பது .
வீரபாண்டி எழுத்து வடிவங்கள் நான்கு தொகுதிகளாகத் தீட்டப்பட்டுள்ளன . அருகருகே உள்ள இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையேயாகும் . அவற்றை திரு . சிலம்பரசன் வரிசைப் படுத்தியிருக்கும் முறையும் பாராட்டத் தக்கதேயாகும் . முதல் தொகுதி நான்கு வடிவங்களையும் , இரண்டாம் தொகுதி இரு சொற்களாக ஐந்துவடிவங்களையும் , மூன்றாவது தொகுதி நான்கு வடிவங்களையும் , நான்காவது தொகுதி மூன்று வடிவங்களையும் கொண்டுள்ளன . வடிவங்கள் காட்டும் பொருள்நிலை சொல்நிலைக்கேற்ப பகுதிகளாக அவை அமைந்துள்ளன . முதலில் அவ்வடிவத் தொகுதிகளின் பொருள்நிலைக்கேற்ப அமைக்கிறேன் :
1) கே ய க க
2) க கன் ய கா ய
3) க க க ய
1 2 3 3க ய - முகய
4) த க் க்
இவ்வடிவங்களின் அடிப்படையில் அவர்கள் சொல்லக் கருதிய கருத்து
1) = கேய ககன்
2) = ககன்ய காய
3) = முகய
4) = தக்கன்
இவற்றுள் ( அ ) (1) கக என்பதன் இரண்டாவது வடிவம் , (3) முகய என்பதன் மூன்றாவது வடிவம் , (4) தக்க என்பதன் இரண்டு மற்றும் மூன்றாவது வடிவங்கள் ஆகியவை வடிவமைப்பால் மனிதக் கருத்துணர்த்தி உயர்திணை ஆண்பால் உணர்த்தி வந்தன . ( ஆ ) 2 ஆம் தொகுதியின் இடமிருந்து இரண்டாவது வடிவம் மனித வடிவ க மற்றும் Y வடிவ ன் எழுத்து இணைந்து கூட்டுவடிவமாகி கன் என்ற அசை உணர்த்தி மனிதன் உட்கார்ந்திருப்பது போல மடிந்த நிலையில் உள்ளது . இத்தகைய தவ என்ற வடிவம் பொதிகை குகை எழுத்தில் மடிந்த நிலையில் வருகிறது . துறவிகள் இவ்வாறு எழுதுவதில் ஏதேனும் மறைபொருள் இருக்கலாம் . ( இ ) 3 ஆம் தொகுதியில் 3 க வடிவங்கள் வந்து - க க க = முக என்றும் ( மு / மூ = மூன்று ) அதனுடன் ய என்ற எழுத்து சேர - முகய என ஆனது . முகய் = குகை . சிந்துவில் நான்கு ய ய ய ய எழுதி = நாய ( 2950 - மகாதேவன் ) = தலைவன் என்று எழுதுவர் . அவ்வாறே மூய என்றும் எழுதினர் . (ஈ ) சிந்துவில் × என்பது த வடிவம் . இங்கு , பாறை எழுத்தில் சற்று மாறி வந்தது .
பொருள்நிலையில் கேயம் = இசை , ககம் = வானம் . ககன் = வானவன் . ககனம் = வானம் . காயம் = உடல் . ககன்ய = ககனத்திற்குரிய - வானில் செல்லும் . வானசாரி = ககன சஞ்சாரி - சித்தர்கள் .
தங்கள் பூத உடலுடன் வானத்தில் சஞ்சரிக்கும் சித்தர்கள் = ககன ( கமன ) சித்தர்கள் . குற்றாலக் குறவஞ்சி சித்தர்கள் வான்வழியே குற்றால நாதரைத் தொழ வருவதை ' கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பர் ' என்று பாடுகிறது . தமது பருவுடலுடன் வானத்தில் சித்தர்கள் சஞ்சரிப்பது காய சித்தி எனப்படும் . இப்பாறை முகையில் ( குகையில் ) தங்கி இருந்தோர் ககன சாரிகள் எனப்படும் ககன சித்தர்கள் என்று மக்கள் நம்பியதை இவ்வெழுத்துகள் உணர்த்துகின்றன . இதன் பொருள் குறித்து நான் இதற்கு மேலே பேச விரும்பவில்லை . ஒரு வரலாற்று ஆய்வாளனது பணி அவன் கண்டு கூறும் பொருள் விளக்கப் பொருத்தம் ஒரு நிகழ்வில் எத்தகைய பங்காற்றுகிறது என்பதுடன் முடிகிறது . மேலாய்வு மொழியாய்வாளர்களுடையதேயாகும் .
இம்முகையில் வாழ்ந்தவன் இசை வானவன் ( கந்தர்வன் ) என்று கருதத் தக்கவன் , அவன் ககனசாரி என்னும் கமன சித்தனாவான் , அவன் இக்குகைக்குரியவன் , அவன் பெயர் தக்கன் என்பதாகும் . இத்துறவிகள் அறிவர் வழிச் சித்தர்களாவர் . இப்பகுதிக்கு அண்மையிலுள்ள திரு அருண மலை எனப்படும் திருவண்ணாமலை சித்தர்கள் உறையுமிடம் என்று இன்றும் பெயர் பெற்றுள்ளது . இந்த வீரபாண்டியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் கீழ்வாலை , சாணூர் , பெருமுக்கல் ஆகிய இடங்களில் தெளிவான சிந்து எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன . கீழ்வாலை - வீரபாண்டி - பெருமுக்கல் என்ற காலநிலைப்படி வரிசைப்படுத்தலாம் . பெருமுக்கல் கிமு 700 என்றால் வீரபாண்டி எழுத்துகள் இன்னும் தொன்மையினவாய் கிமு 1000 என்ற கால அளவுக்குக் குறையாதத் தொல்லெழுத்துகளாகலாம்
நன்றியுடன்
படித்து கூறிய ஐயா நாகை.பா.ஜீவா அவருடைய பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=182083542871794&id=100032104492713
திருக்கோவிலூர் நல்லதம்பி
திங்கள், 13 ஜனவரி, 2020
தமிழி எழுத்து பாறை ஓவியம்
திருக்கோவலூர் அருகே உள்ள வீரப்பாண்டி, தொல்லியல் தடயங்கள் நிறைந்தக் கிராமம்.
நேற்று, திருக்கோவலூர் வந்த ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு, ரிப்போடர் செங்குட்டுவன், பேராசிரியர் செல்லபெருமாள் ஆகியோர் வந்திருந்தார்கள்
ஊரின் புறத்தே பரந்து விரிந்து காணப்படுகிறது பெரிய ஏரி.
ஏரிக்குள் அங்கும் இங்கும் ஆக பெரியதும் சிறியதுமாக பாறைக் குன்றுகள் முளைத்துக் காணப்படுகின்றன.
குன்றின் மீது ஏறினோம். இடையில் அழகான குகைத் தளம். கீழ்வாலையில் பார்க்கிறோமே, அந்த மாதிரி!
அருகில் உள்ள ஓரு பாறை. வழவழப்பானது. சிரமப்பட்டு தான் ஏறினோம்.
இதில் தான் அந்தத் தொல்லியல் அடையாளங்கள் நிறைத்துள்ளன.
இன்னும் ஆவணப்படுத்தப் படாதவை என்றே கருதுகிறோம்.
விரைவில் ஆவணப்படுத்துவோம்.
வெள்ளி, 10 ஜனவரி, 2020
மீன் வளர்பும் நீர் நிலை ஆலை கழிவுகளால் மாசடைதல்
கோழி பன்னை கழிவை மீன்களுக்கு உணவாகப் போடுகின்றார்கள் இதனை உண்ணும் மீன் மற்ற மீனை விடப் பல மடங்கு வேகமாக எடை அதிகரிக்கும் காரணம் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக் மற்றும் ஆர்மோம் ஊசியும் கோழியின் மலம் வழியாக வருவதை மீன்களுக்குப் போடுவதுதான் வருடாவருடம் இதனைப் போட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழியும்
சனி, 4 ஜனவரி, 2020
"கரு ஓட்டம்" (கருவோட்டம்)
#தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டுள்ளனர்.
தினசரி காலண்டரில் #கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?
நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,
சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறை என்று பாக்கும் போதெல்லாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்.
இது ஏதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல
உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை...
அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது
நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது
இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்
அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்
சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது
இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும். அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவர் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.
அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்
இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது
ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரமெல்லாம் தெரியாது இல்லையா??
எனவே
மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்
இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.
எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்
எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்.
இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால் தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது
இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்
நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்
கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.
ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று
மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள
#வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்...
புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!
வெள்ளி, 15 நவம்பர், 2019
15/11/2019 இன்றைய தமிழ் சொல் (பூவுருளை) பூக்கோசு Cauliflower
புதன், 30 அக்டோபர், 2019
28-10-2019 மழை
28-10-2019 காலை முதல் இரவு 9.30 மணி வரை பதிவான மழை 3.7 செண்டி மீடர்
இரவு முதல் 29-10-2019 காலை வரை 1.5செண்டி மீடர்




























