Translate

புதன், 6 ஏப்ரல், 2016

நம்மாழ்வார் பிறந்த தினம்

விஞ்ஞானத்தின்
நஞ்சுக்குப் பலியாகி
வீழ்ந்து கிடந்தாள்
மண் அன்னை

பாரெலாம் போற்றும்
'பசுமைப் புரட்சி'
தாய் மண்ணையும்
தாய்ப் பாலையும் நஞ்சாக்கிவிட்டு
நாகரிகக் கதை பேசியது

உச்சிக்கு நஞ்சேரி
உதைத்துக்கொண்டிருந்த
உழவுக்கு
'உயிர்த் தண்ணி' ஊற்றினார்
நம்மாழ்வார்!

காப்பாற்ற ஆளின்றி
கட்டிலில் கிடந்த நிலத்திற்கு
இயற்கை மருத்துவம் செய்தார்
நம்மாழ்வார்!

அவரின்
பாதம் பட்ட மண்ணுக்கெல்லாம்
'அகலிகை சாபம்'
நீங்கியது

நூலறிவு மட்டும் கொண்ட
ஆய்வுக்கூட விஞ்ஞானிகள்கூட
மண்ணறிவு ஞானியை
மண்டியிட்டு வணங்கினர்

நிலத்தாய் மீண்டும்
நிமிர்ந்து உட்கார்ந்தாள்!

'பூமியில் தீமை'
தலைவிரித்தாடும்போது
அவதாரம் எடுக்க
ஆண்டவன் மறந்தாலும்
ஆழ்வார் மறக்கவில்லை!

கார்ப்பரேட் கைப்பாவையாக
கழனிகள் ஆக்கப்படும்போதெல்லாம்
ஒற்றை வைக்கோல் புரட்சியோடு
மசானபு புகாகோக்கள்
மண்ணில் தோன்றிவிடுவார்கள்!

கொஞ்சம்
கூர்ந்து கவனியுங்கள்...
"நம்மாழ்வார் மட்டும்
இல்லையென்றால்
நம்கதி என்னவாவிருக்குமென்று"
நஞ்சையும் புஞ்சையும்
பேசிக்கொள்ளும் சத்தம்
உங்கள் காதுகளுக்கும் கேட்கும்!



பேஸ் புக்கில் படித்தது நன்றி
   பாவலர் வையவனுக்கு

https://mobile.facebook.com/story.php?story_fbid=617750445043892&id=100004268263813&refid=17&_ft_=top_level_post_id.617750445043892%3Atl_objid.617750445043892%3Athid.100004268263813%3A306061129499414%3A2%3A0%3A1462085999%3A-6511589080401986600&__tn__=%2As

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக