Translate

திங்கள், 25 ஏப்ரல், 2016

வீரப்பாண்டி திரௌபதி அம்மன் கோவில் தோ்


கோனார் உபயம்

23/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா எட்டாம் நாள் கோனார் உபயம் காளி, பிடாரன் புடாரசி, கரகாட்டம் வாண வேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது

ஜமிண் உபயம் & திருமணம்

22/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா ஏழாம் நாள் ஜமீன்  உபயம் அர்ச்சுனன் பாஞ்சாலி  திருமணம் 5000 நபர்களுக்கு வடை பலகாரத்துடன் திருமண விருந்து காளி, பிடாரன் புடாரசி, வாண வேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது

வியாழன், 21 ஏப்ரல், 2016

கவுண்டர் உபயம் பக்கா சூரன் திருவிழா

கவுண்டர் இரண்டாம் நாள் உபயம் 21/04/2016  3.00 மாளை பக்கா சூரன் திருவிழாவும், திரை இசைக் கச்சேரியும், கரகாட்டம், பொடாரன் பொடாசியும்,  வாண வேடிக்கை, 12 சாமி மேள இசையுடன் 12.00 மணியளவில் சாமி ஊர்வலம் புறப்பட்டது.

நன்காம் நாள் உபயம்

20/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா நான்காம் நாள் கவுண்டர்  உபயம் பாட்டு கச்சேரி, கரகாட்டம், கிராமிய பாட்டு, பிடாரன் பிடாரச்சி & வானவேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது

புதன், 20 ஏப்ரல், 2016

திருவிழா மூன்றாம் நாள் செட்டியார் உபயம்

19/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா மூன்றாம் நாள் செட்டியார்   உபயம் பாட்டு கச்சேரி & கரகாட்டம் வானவேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம்







செவ்வாய், 19 ஏப்ரல், 2016

இரண்டாம் நாள் உபயம் 18/04/2016

18/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா இரண்டாம் நாள் உபயம் நடு வீட்டுச் செட்டியார் காளி ஆடி வந்தது.





திங்கள், 18 ஏப்ரல், 2016

பாஞ்சாலித் திருவிழா கணக்குப் பிள்ளை உபயம்

வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா
முதல் உபயம்


     17/4/16 கணக்குப் பிள்ளை உபயம்
இரவு பாடல் இசை நிகழ்ச்சியும் வாண வேடிக்கையுடன் சாமி புறப்பட்டது.









போர்த்து ராசா சாமி ஊர்வலம்

காப்புக் கட்டிய நாள் முதல் உபயம் ஆரம்பிக்கும் நாள் வரை போர்த்து ராசா சாமி கத்தி & சூலம் ஆட்டத்துடன் காலை மாலை ஊர்வலம் வந்தது



புதன், 6 ஏப்ரல், 2016

நம்மாழ்வார் பிறந்த தினம்

விஞ்ஞானத்தின்
நஞ்சுக்குப் பலியாகி
வீழ்ந்து கிடந்தாள்
மண் அன்னை

பாரெலாம் போற்றும்
'பசுமைப் புரட்சி'
தாய் மண்ணையும்
தாய்ப் பாலையும் நஞ்சாக்கிவிட்டு
நாகரிகக் கதை பேசியது

உச்சிக்கு நஞ்சேரி
உதைத்துக்கொண்டிருந்த
உழவுக்கு
'உயிர்த் தண்ணி' ஊற்றினார்
நம்மாழ்வார்!

காப்பாற்ற ஆளின்றி
கட்டிலில் கிடந்த நிலத்திற்கு
இயற்கை மருத்துவம் செய்தார்
நம்மாழ்வார்!

அவரின்
பாதம் பட்ட மண்ணுக்கெல்லாம்
'அகலிகை சாபம்'
நீங்கியது

நூலறிவு மட்டும் கொண்ட
ஆய்வுக்கூட விஞ்ஞானிகள்கூட
மண்ணறிவு ஞானியை
மண்டியிட்டு வணங்கினர்

நிலத்தாய் மீண்டும்
நிமிர்ந்து உட்கார்ந்தாள்!

'பூமியில் தீமை'
தலைவிரித்தாடும்போது
அவதாரம் எடுக்க
ஆண்டவன் மறந்தாலும்
ஆழ்வார் மறக்கவில்லை!

கார்ப்பரேட் கைப்பாவையாக
கழனிகள் ஆக்கப்படும்போதெல்லாம்
ஒற்றை வைக்கோல் புரட்சியோடு
மசானபு புகாகோக்கள்
மண்ணில் தோன்றிவிடுவார்கள்!

கொஞ்சம்
கூர்ந்து கவனியுங்கள்...
"நம்மாழ்வார் மட்டும்
இல்லையென்றால்
நம்கதி என்னவாவிருக்குமென்று"
நஞ்சையும் புஞ்சையும்
பேசிக்கொள்ளும் சத்தம்
உங்கள் காதுகளுக்கும் கேட்கும்!



பேஸ் புக்கில் படித்தது நன்றி
   பாவலர் வையவனுக்கு

https://mobile.facebook.com/story.php?story_fbid=617750445043892&id=100004268263813&refid=17&_ft_=top_level_post_id.617750445043892%3Atl_objid.617750445043892%3Athid.100004268263813%3A306061129499414%3A2%3A0%3A1462085999%3A-6511589080401986600&__tn__=%2As

திங்கள், 4 ஏப்ரல், 2016

மன்மதன் திருவிழா

மன்மதன் திருவிழா நாடகம்


மன்மதன் திருவிழா 2016

சனிக்கிழமை  குளக்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து இரவு காப்பு கட்டி
மன்மதன் இரதி திருமணம் நடந்தது ஞாயிறு இரவு தெருக்கூத்து அதிகாலை சிவன் தவத்தைக் கலைக்க மன்மத பாணம் விடும் மன்மதன் அதே பாணத்தால் எரிந்து விடுகின்றான்