Translate

செவ்வாய், 6 டிசம்பர், 2016

தமிழக முதல்வர் மரணம்

     தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா 5/12/2016 இரவு 11.30 மணியளவில் காலமானார்

     காலை நமது வீரப்பாண்டியில் அமைதி ஊர்வலமாக அஞ்சலி செலுத்தப்பட்டது 

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

குரு பெயர்ச்ச்

நமது வீரப்பாண்டி சிவன் கோவிலில் குரு பெயர்ச்சி புஜை நடை பெற்றது

திரு நாராயண சாமி கோவில் திருவிழா

     இன்று 104 ஆண்டு திருவிழா காலை பஜனை ஊர்வலத்துடன்
தொடங்கி திரு நாராயண சாமிக்கு படைத்து மாலை சாப்பாடு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது இரவு கோகுல கண்ணன் வீதி உலா வர இருக்கின்றது




திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அம்மைச்சார் அம்மன்

அம்மைச்சார் அம்மன்

     நமது வீரப்பாண்டியில் ஆடி இரண்டாம் வெள்ளி 29/07/2016 அம்மைச்சார் அம்மன் ஆலயத்தில் பொங்கள் வைத்து வழிபட்டார்கள்.
குதிரையில் கலசம் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டது.

ஆலயத்தின் சிறப்பு

     இந்தக் கோவிலில் சில தலைமுறைக்கு முன்பு திருவிழா நடந்தது பொங்கள் வைத்து அனைவரும் வழிபட்டார்கள்.
இந்த பொங்கள் வைப்பதற்குக் கூட அரிசி இல்லாத காரணத்தால் வெறும் பானையில் தண்ணீர் மட்டும் வைத்து அடுப்பேற்றி வைத்து எரியவைத்தாள் ஒரு பக்தை ஆச்சரியமாக இந்த வெறும் பாணை முதலில் பொங்கிவந்து ஆச்சரியம் ஏற்படுத்தியது
இந்த ஆச்சரியம் நடந்தது முதல் வெறும் பாணை பொங்கி வந்த வீரப்பாண்டியள் என்று அழைக்கப்படுகின்றது.

செவ்வாய், 17 மே, 2016

கூழ் ஊர்றும் திருவிழா

கெங்கை அம்மன் கூழ் ஊர்றும் திருவிழா



இரவு வீதி உலா வந்தது கெங்கை அம்மன்

+2

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது இதில் 65% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்தார்கள்

16/05/2016 தேர்தல்

நேற்று தேர்தலில் நமது வீரப்பாண்டியில் 75% வாக்குகள் பதிவானது
மொத்த வாக்காளர்கள்
பதிவான வாக்குகள் 4890

செவ்வாய், 10 மே, 2016

கெங்கை அம்மன் காப்பு கட்டுதல்

     இன்று ஏரியில் அமைந்திருக்கும் பிடாரி கோவிலில் சென்று உத்தரவு கேட்டு வந்து நமது அக்காதா குளக்கரையில் அமைந்திருக்கும் கெங்கை அம்மன் தெய்வத்திற்கு இன்று மாலை காப்புக்கட்டப்பட்டது 17/05/2016 அன்று மதியம் கோயில் முன்பு அமைந்துள்ள சிமன்ட் தொட்டியில் கூழ் வார்தல் நடைபெறும்.



ஞாயிறு, 1 மே, 2016

தொழிலளார் தின வாழ்த்துகள்

வாழ்துகள்

இன்று கும்பம் கொட்டுதல்


கோட்டைக்குப் போர் மன்னனைக் காவலுக்கு வைப்பதற்கு மலைபோல் சோரு கும்பம் கொட்டி செம்பரி ஆடு வைத்து படையல் போடப்பட்டது


பாரதப் போர் முடிந்து அர்ச்சுனன் அரியணை ஏறுதல் பட்டாபிஷேகம் நாயுடு உபயம் 27/4/16

போரில் வெற்றி பெற்றமைக்கு கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு முடி சூடுதல். கரகம் &
வாண வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் வந்தது.


திங்கள், 25 ஏப்ரல், 2016

வீரப்பாண்டி திரௌபதி அம்மன் கோவில் தோ்


கோனார் உபயம்

23/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா எட்டாம் நாள் கோனார் உபயம் காளி, பிடாரன் புடாரசி, கரகாட்டம் வாண வேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது

ஜமிண் உபயம் & திருமணம்

22/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா ஏழாம் நாள் ஜமீன்  உபயம் அர்ச்சுனன் பாஞ்சாலி  திருமணம் 5000 நபர்களுக்கு வடை பலகாரத்துடன் திருமண விருந்து காளி, பிடாரன் புடாரசி, வாண வேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது

வியாழன், 21 ஏப்ரல், 2016

கவுண்டர் உபயம் பக்கா சூரன் திருவிழா

கவுண்டர் இரண்டாம் நாள் உபயம் 21/04/2016  3.00 மாளை பக்கா சூரன் திருவிழாவும், திரை இசைக் கச்சேரியும், கரகாட்டம், பொடாரன் பொடாசியும்,  வாண வேடிக்கை, 12 சாமி மேள இசையுடன் 12.00 மணியளவில் சாமி ஊர்வலம் புறப்பட்டது.

நன்காம் நாள் உபயம்

20/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா நான்காம் நாள் கவுண்டர்  உபயம் பாட்டு கச்சேரி, கரகாட்டம், கிராமிய பாட்டு, பிடாரன் பிடாரச்சி & வானவேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது

புதன், 20 ஏப்ரல், 2016

திருவிழா மூன்றாம் நாள் செட்டியார் உபயம்

19/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா மூன்றாம் நாள் செட்டியார்   உபயம் பாட்டு கச்சேரி & கரகாட்டம் வானவேடிக்கையுடன் சாமி இரவு 10.00 மணிக்கு ஊர்வலம்







செவ்வாய், 19 ஏப்ரல், 2016

இரண்டாம் நாள் உபயம் 18/04/2016

18/04/2016 நமது வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா இரண்டாம் நாள் உபயம் நடு வீட்டுச் செட்டியார் காளி ஆடி வந்தது.





திங்கள், 18 ஏப்ரல், 2016

பாஞ்சாலித் திருவிழா கணக்குப் பிள்ளை உபயம்

வீரப்பாண்டி பாஞ்சாலித் திருவிழா
முதல் உபயம்


     17/4/16 கணக்குப் பிள்ளை உபயம்
இரவு பாடல் இசை நிகழ்ச்சியும் வாண வேடிக்கையுடன் சாமி புறப்பட்டது.









போர்த்து ராசா சாமி ஊர்வலம்

காப்புக் கட்டிய நாள் முதல் உபயம் ஆரம்பிக்கும் நாள் வரை போர்த்து ராசா சாமி கத்தி & சூலம் ஆட்டத்துடன் காலை மாலை ஊர்வலம் வந்தது



புதன், 6 ஏப்ரல், 2016

நம்மாழ்வார் பிறந்த தினம்

விஞ்ஞானத்தின்
நஞ்சுக்குப் பலியாகி
வீழ்ந்து கிடந்தாள்
மண் அன்னை

பாரெலாம் போற்றும்
'பசுமைப் புரட்சி'
தாய் மண்ணையும்
தாய்ப் பாலையும் நஞ்சாக்கிவிட்டு
நாகரிகக் கதை பேசியது

உச்சிக்கு நஞ்சேரி
உதைத்துக்கொண்டிருந்த
உழவுக்கு
'உயிர்த் தண்ணி' ஊற்றினார்
நம்மாழ்வார்!

காப்பாற்ற ஆளின்றி
கட்டிலில் கிடந்த நிலத்திற்கு
இயற்கை மருத்துவம் செய்தார்
நம்மாழ்வார்!

அவரின்
பாதம் பட்ட மண்ணுக்கெல்லாம்
'அகலிகை சாபம்'
நீங்கியது

நூலறிவு மட்டும் கொண்ட
ஆய்வுக்கூட விஞ்ஞானிகள்கூட
மண்ணறிவு ஞானியை
மண்டியிட்டு வணங்கினர்

நிலத்தாய் மீண்டும்
நிமிர்ந்து உட்கார்ந்தாள்!

'பூமியில் தீமை'
தலைவிரித்தாடும்போது
அவதாரம் எடுக்க
ஆண்டவன் மறந்தாலும்
ஆழ்வார் மறக்கவில்லை!

கார்ப்பரேட் கைப்பாவையாக
கழனிகள் ஆக்கப்படும்போதெல்லாம்
ஒற்றை வைக்கோல் புரட்சியோடு
மசானபு புகாகோக்கள்
மண்ணில் தோன்றிவிடுவார்கள்!

கொஞ்சம்
கூர்ந்து கவனியுங்கள்...
"நம்மாழ்வார் மட்டும்
இல்லையென்றால்
நம்கதி என்னவாவிருக்குமென்று"
நஞ்சையும் புஞ்சையும்
பேசிக்கொள்ளும் சத்தம்
உங்கள் காதுகளுக்கும் கேட்கும்!



பேஸ் புக்கில் படித்தது நன்றி
   பாவலர் வையவனுக்கு

https://mobile.facebook.com/story.php?story_fbid=617750445043892&id=100004268263813&refid=17&_ft_=top_level_post_id.617750445043892%3Atl_objid.617750445043892%3Athid.100004268263813%3A306061129499414%3A2%3A0%3A1462085999%3A-6511589080401986600&__tn__=%2As

திங்கள், 4 ஏப்ரல், 2016

மன்மதன் திருவிழா

மன்மதன் திருவிழா நாடகம்


மன்மதன் திருவிழா 2016

சனிக்கிழமை  குளக்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து இரவு காப்பு கட்டி
மன்மதன் இரதி திருமணம் நடந்தது ஞாயிறு இரவு தெருக்கூத்து அதிகாலை சிவன் தவத்தைக் கலைக்க மன்மத பாணம் விடும் மன்மதன் அதே பாணத்தால் எரிந்து விடுகின்றான்










செவ்வாய், 8 மார்ச், 2016

திங்கள், 7 மார்ச், 2016

சனி, 27 பிப்ரவரி, 2016

பள்ளி ஆண்டுவிழா

நமது வீரப்பாண்டி 26/02/2016  அம்பேத்கர் நகர் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உ.வே.சா பிறந்த நாள்

இன்று உ.வே.சா தமிழ்த் தாத்தா பிறந்த நாள்



நல்நூலகர் மு.அன்பழகன்
மேலந்தல் -605754
விழுப்புரம் மாவட்டம் இருந்து 1000 ஓலைச்சுவடி ஸ்கேன்செய்தோம் இந்த வேலை இந்த வார இருதிக்குள் முடிந்துவிடும்

இதில் பதிவேற்றம் செய்யப்படும்

சனி, 23 ஜனவரி, 2016

ஆக்கிரமிப்பு அகற்றம்

நமது ஊர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்த்தார் கூத்து 22/01/2016

     நீர்தார் கூத்து

நமது தமிழர் பாரம்பரியமாக  இறந்தவர்களுக்கு 30ஆம் நாள் கூத்து நடை பெறுவது வழக்கமாக இருந்தது தற்போது  இது போல் கூத்து நடை பெறுவது அரிதாகிவருகின்ற சமயத்தில் நமது வீரப்பாண்டியில் சில நீர்த்தார் கூத்து நேற்று 22/01/2016  அபிமன்னன் வதை கூத்து நடைபெற்றது

வியாழன், 21 ஜனவரி, 2016

ஆற்றுத் திருவிழா 19/01/2016

     19/01/2016 அன்று காலை 7 மணி அளவில் நமது வீரப்பாண்டி சிவன் ஆலயத்தில் இருந்து திருக்கோவிலூர் தென்பென்ன ஆற்றுக்குப் புறப்பட்டது

10 00 மணி அளவில் ஆற்றுக்கு வந்தது
முதலில் இரெட்டை விநாயகரும் அடுத்து வீரப்பாண்டி சிவனும் அடுத்து கிழையூர் சிவனும் ஒரு பந்தலிலும்

அடுத்த பந்தலில் அரகண்டநல்லூர் சிவனும் காச்சி அளித்தார்கள்

மதியம் 1.10 மணியவில் உற்சவ சிலையான திரி சூல வடிவான அம்மன் ஆற்றில் இரங்கியது

5.00 மணியளவில் ஆற்றில் இருந்து சாமிகள் புறப்பட்டது வீரப்பாண்டியை சுற்றி விட்டு சிவன் கோவிலை வந்தடைய இரவு  11.00 மணியாகிவிட்டது

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஞாயிறு பொங்கல் (சூரியன் பொங்கல்)

     இன்று காலை சூரிய உதயத்தின் போது பொங்கல் வைத்து ஞாயிற்றுக்குப் படைப்பார்கள் இதனால் ஞாயிறுப் பொங்கல் எண்ணும் கூறுவார்கள்
இன்று மதியம் கரி சமைத்து உண்பார்கள்.
     கேளிக்கை கொண்டாட்டமும் மகிழ்ச்சியாய் கடற்கரை ஆற்றங்கரை திரையரங்கம் போன்ற இடங்கள் கூடம் நிரம்பி வழியும்.
     இன்று பல வீதியில் உறியடி நடைபெற்றது ஒரு இடத்தில் கோலப் போட்யும் கபடியும் மற்றும் சில விலையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.


     சென்ற ஆண்டு இந்த நாளில் சருக்கு மரம் ஏறும் போட்டியம் பரவலாக நடந்தது இம்முறை இது போன்ற போட்டியைக் கானவில்லை.
    மற்ற வியாபாரத்தை மிச்சும் அரசு வியாபாரம் டாஸ்மார்க் மதுபானம், இதற்கு மட்டும் எப்பொதும் சரக்கு இல்லை என்றே கூறாமல் அமுத சுரப்பியாய் வந்து கொண்டே இறுகு. நாயவிலைக்கடயில் (ரேசன் கடை) அரிசி, கோதுமை, மைதா, பாமாயில், சர்க்கரை, சீமை எண்ணை (மண்ணெண்ணெய்). கூட்டுறவு வங்கியில் உரம் பல முறை விவசாய கடன். மற்றும் பல அரசு இடம் காளியாக்க இருக்கும் ஆணால் டாஸ்மார்க் மட்டும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும்



     இன்று காலைக் குழந்தைகள் மாமா வீட்டிற்கு சென்று பால் பொங்குசா என்று கேட்டு ஆற்றுத் திருவிழாவிற்கு காசு வாங்குவார்கள் இதில் ஒருவித மகிழ்ச்சி குழந்தைகளுக்கு.