Translate

வெள்ளி, 31 ஜூலை, 2015

மூண்றாம் நாள் உச்சபம்

 மூண்றஆம் நாள் இரவு 30/07/2015  வீதி உலா தாணிப்பாடியார், காக்காயன், பொச்சிபுட்டான், திரௌபதை அம்மன் கோவில் பூசாரி ஆகிய வகையரா உபயம்
     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக 31/07/2015  1.10 காலை  மணிக்கு வாண வேடிக்கை மற்றும் பாட்டு கச்சேரி உடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 7மணி அளவில் அம்மசாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.

அப்துல் கலாம்


வியாழன், 30 ஜூலை, 2015

இரண்டாம் நாள் இரவு வீதி உலா 

     இரண்டாம் நாள் 29/07/2015 இரவு வீதி உலா கொம்மையன் வகையரா, ஆனந்தலார் வகையரா, மதுராம்பட்டார் வகையரா, கோணார் வகையரா. ஆகியோர்  உபயம்

     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.50 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் கரகாட்டத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மசாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.

புதன், 29 ஜூலை, 2015

எல்லை பிடாரி அம்மன் திருவிழா

     ஆடி மாதம் 12-நாள் காதன்மை ஆண்டு  (மன்மத ஆண்டு) 28/07/2015 அன்று மாலை 3-மணி அளவில் எல்லைப் பிடாரி அம்மனுக்கு முறைப்படி காப்பு கட்டி திரு விழா செங்கா கவுண்டர் வகைராவால் தொடங்கப்பட்டது.
     ஊர் எல்லையில் குடி கொண்டிருக்கும் செல்லாத்தாவை பெரிய ஏரி பொறையாத்த மலையில் இருக்கும் பொறையாத்தா  கோவிலுக்கு அழைத்து வருவதற்கு, அம்சாரம்மன் ஆலயத்திள் இருந்து செல்லாத்தாவின் உற்ச்சவ சிலையான திரிசூலம் இம்முறை விஜி அவர்கள் சுமர்ந்து வந்தார்.
     எல்லைப் பிடாரி அம்மன் இருப்பிடமான மூன்று ஊர் எல்லையான ( எல்லை தரிச்சி ) வீரப்பாண்டி மற்றும் நாயனூர் கிருச்ணாபுரம் இடத்தில் வைத்து பொங்கல் பூசை வழிபாடு செய்து இந்த எல்லையில் உத்தரவு கேட்கப்பட்டு மற்றும் சாமி ஆடி உத்தரவு கொடுத்ததும் செல்லாத்தாவை எடுத்துக் கொண்டு ஒரே மூச்சாக ஓடி வந்து பொறையாத்தா கோவிலை வந்து அடந்தார்கள்.
     இங்கும் பொங்கள் வைத்து பூசை செய்து இரவு 7-00 மணிக்கு பொறையாத்தாவிற்கும், செல்லாத்தாவிற்கும், உற்சவ சிலையான திரி சூலத்திற்கும், பலிபீடத்திற்கும், இதனை தொடர்ந்துநாட்டார் ராஜசேகர், பூசாரிகள், மற்றும் அம்பேத்கார் நகரைத் சேர்த செல்லப்பிள்ளை ஆடும் கூத்தாடி வீட்டார்க்கும் முறைப் படி காப்பு கட்டப்பட்டது.
     முதல் நாள் இரவு வீதி உலா செங்கா கவுண்டர் வகையரா உபயம்
     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 11.50 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் கரகாட்டத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மசாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.

சனி, 18 ஜூலை, 2015

ரம்ஜான் குப்தா பண்டிகை

நமது வீரப்பாண்டியில் உள்ள பழமையான மசுதியில்இன்று சிறப்பாக ரம்ஜான் குப்தா பண்டிகை நடைபேற்றது.

புதன், 15 ஜூலை, 2015

புலிக்கல் பெரியாயி அம்மன்

புலிக்கல் பெரியாயி அம்மன் ஆலையத்தில் அம்மாவாசை பூசை நடந்தது

பிடாரி அம்மன் காப்பு கட்டுதல்

     இன்று காலை 10.00 மணியலவில் அமசார் அம்மன் ஆலையத்தில் பிடாரியம்மன் திருவிழா  விழாவிற்கு காப்புகட்டுவது எண்று பேசி முடிவு எடுக்கப்பட்டது.
   
     மன்மதவருடம்  ஆடி மாதம் 12ஆம் நாள் 28/07/2015 செவ்வாய்கிழமை காப்பு கட்டி உற்சவம்.

திங்கள், 6 ஜூலை, 2015

குரு பெயர்சி

நமது வீரப்பாண்டி
அப்துல்யநாதேசுவரன் கோவில் 
குரு பகவான் சிறப்பு பிராத்தணை