Translate

திங்கள், 23 ஜூன், 2014

சுடு மண் சிற்பங்கள் ,Hot mud sculptures

          வீரப்பாண்டி 9 வருடங்கலுக்கு முன்பு திரெளபதி அம்மன் கோவில் வேலைக்கு மண் எடுக்க சென்ற போது வடக்கு பக்கத்தில் மண்டபத்து பாறை அருகில் ஒரு மண் திட்டு இருந்தது. அதனை தோண்டி பார்த்த போது நான்கு புறமும் கற் பலகை கொண்டு கட்டப்பட்ட வீடு போன்றும் மேற்புரம் ஒரு கற்பலகை கொன்டு மூடி இருந்தது.
        இது கற்பலகை நண்கு பலகையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நான்கு புறத்திற்கும் மேல் ஒரு மூடி போட்டு இருந்தது. இதற்கு உள் ஒரு விளக்கும் சில சுடு மண் சிற்பங்கலும் இருந்தது அந்த சிற்பம் குதிரை கால்கலும் மற்றவையும் இவை அனைத்தும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாச்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.


    இது ஆதிகாலங்களில் மனிதர்கள் வாழ பயன்படுத்திய வீடாக இருக்க                வாய்ப்பு குறைவு. வீடாக இருந்தால் வாயிற்படி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். 
கோயிலாக இருந்தாலும் வாய்ப்படி அவசியம் வைத்து இருப்பார்கள். வாயிற்படி இல்லா காரணத்தால்
              இது ஒரு நினை விடமாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ஆதியில் மணிமனிதன் வாழ்ந்து இறந்த பிறகு அவனுடன் அவன் பயன் படுத்திபயன்படுத்திய பெருள்கள் வைத்து புதைத்து இருப்பார்கள். இது அவன் மீண்டும் அதை பயன்படுத்துவான் என நம்பியே செய்யப்படும்.
          அல்லது வயது முதிர்வினால் மரனம் நிகழும் முன்பு கூட தாழிகள் மூலமாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் பயன்படுத்திய பெருள்கள் . விளக்கு, உணவு, அவனது உடையும் சேர்த்து தாழிகல் வைத்து உயிருடன் மூடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்தது நினைவில் வைத்துக் கொள்ளவும்.
         குதிரையின் சுடு மண் சிற்பம் இருப்பதால் இது குதிரை பயன்படுத்திய போர் வீரனாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். வீரனாக இருந்தால் போரில் மரனம் அடைந்த நினைவு சின்னமாக இருக்கும். 
       முடிந்தால் அடுத்து வருவாய்த்துறை வசம் இருக்கும் விளக்கு, குதிரை சுடுமன் சிற்பம் புகைப்படங்கள் பதிவேண்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக