Translate

திங்கள், 12 பிப்ரவரி, 2018

அந்தகாலத்திய கவலை [கமலை ] பாசனம்


அன்புடையீர் !
வணக்கம் .அன்பர் சென்னை சேவாஸ் பாண்டியன் அவர்கள் பதிவில் '' கமலை இறைத்தல் '' பற்றி குறிப்பிட்டு ,கீழ்வரும் கருத்தையும் பதிவிட்டிருந்தார் .
'' பழங்காலத் தமிழர் நீர் இறைக்கும் முறையாம், ஏற்றம் இறைத்தல் மற்றும் கமலை இறைத்தல் குறித்த தகவலோ, படங்களோ இணையத்தில் ஏதுமில்லை ''.
அடியேன் , என்னுடைய சிறுவயதில் எங்களது தோட்டத்தில் கமலை ஏற்றத்தின் கயிறுகளில் அமர்ந்து செல்வதை ஒரு விளையாட்டாகவே விளையாடியுள்ளேன் ,குத்தகைதாரர் அமரர் மாரப்பக் கௌடர் எவ்வாறு அமர்ந்து நீர் இறைப்பது என்பது பற்றி சொல்லிக் கொடுத்தது பசுமையாக நினைவில் உள்ளது .
கீற்று இணையதளத்தில் அன்பர் எழுத்தாளர்: .சிவசுப்பிரமணியன் அவர்கள்எழுதிய கட்டுரையிலிருந்து ======
மின்சாரத்தால் இயங்கும் நீர் இறவை யந்திரம் அறிமுகமாகும் முன்னர் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவைப்படும் அதிக அளவிலான தண்ணீரைக் கிணறுகளில் இருந்து இறைக்கப் பயன்பட்ட கருவிகவலை’ (கமலை) ஆகும்.
இரண்டு மாடுகளின் துணையுடன் கவலை அல்லது கமலையால் நீர் இறைப்பர். ஒரு மணிக்கு இரண்டாயிரம் கேலன் அல்லது 9092லிட்டர் தண்ணீரை, கவலையைப் பயன்படுத்தி இறைக்க முடியும்.
இதை நம் பாரம்பரியத் தொழில்நுட்பத்தின் அடையாளம் எனலாம். கிணற்றினுள் நீரை முகக்கவாய் அகன்ற அண்டா போன்ற அமைப்புடைய கலன் பயன்பட்டது. இது உலோகம் (பெரும்பாலும் துத்தநாகத் தகடு) அல்லது தோலால் செய்யப்பட்டிருந்தது. இதுவேபறிஎன்று கொங்குப் பகுதி யிலும், ‘கூனைஎன்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்பட்டது. தோலால் ஆன பறியே கொங்குப் பகுதியில் பரவலாக வழக்கில் இருந்துள்ளது.
பறியின் அடிப்பகுதியானது வாய்ப்பகுதியைவிடச் சிறிய அளவிலான துவாரத்தைக் கொண்டிருக்கும். இதன் வழியாகவே பறியிலுள்ள நீர் வெளியேறும். நீருடன் கிணற்றில் இருந்து மேலே வரும் பறியில் உள்ள தண்ணீர் கிணற்றுள் விழுவதைத் தவிர்க்கவும், கிணற்றின் தொட்டியில் அது முழுமையாக விழவும்தும்பிஎன்ற பெயரிலான தோலால் செய்யப்பட்ட உறுப்பு பறியின் அடிப்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும். தென்மாவட்டங்களில் இதை வால் என்பர். இதன் வாய்ப்பகுதியும் அடிப்பகுதியும் மேலும் கீழும் தைக்கப்படாத நீண்ட பை போன்று இருக்கும்.
தண்ணீருடன் கூடிய பறியைக் கவலை மாடுகள் உயரே இழுக்கும்போது தும்பியின் வழியாக நீர் கொட்டுவதைத் தடுக்க அதன் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் கயிறு கட்டுவர். இக்கயிறு தும்பி மேலே வந்தவுடன் தளரும் வகையிலும் கிணற்றிலிருந்து மேலே வரும்போது தும்பியின் அடிப் பகுதியை இறுக்கும் வகையிலும் கட்டப்பட்டிருக்கும்.
இக்கயிறுதும்பிக்கயிறுஎன்று கொங்கு வட்டாரத்திலும்,‘வாலக்கயிறுஎன்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்படும். இக்கயிறு கட்ட தும்பியின் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் துவாரம் இருக்கும். இது தும்பிக்காது எனப்படும்.
தோலால் ஆன பறியில்,அதன் அடிப்பகுதியுடன் தும்பியானது இணைத்துத் தைக்கப்பட்டிருக்கும். இதனால் உலோகத்தாலான பறியில் தும்பியை இணைத்துக் கட்டுவதுபோல் கட்டவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியாகப் பறியைப் பயன் படுத்துவதால், பறியிலும், தும்பியிலும் சிறு பொத்தல்கள் ஏற்படுவதுண்டு. இவற்றின் வாயிலாக நீர் சிந்தி வீணாவதைத் தடுக்க, ‘பற்றாசுஎன்ற பெயரிலான துண்டுத்தோல்களைப் பயன் படுத்தித் தைப்பது அவசியமான ஒன்றாகும்.
கவலையின் முக்கிய உறுப்புகளான பறியும் தும்பியும் தோலால் செய்யப்படுவதால் இவற்றை உருவாக்குவதிலும் பழுதுபார்ப்பதிலும் தோல் தொழிலாளர்களான மாதாரியரின் பணி தவிர்க்க முடியாத ஒன்றாகும். பறி தொடர்பான தொழில் நுட்பத்தில் இவர்கள் மட்டுமே வல்லவர்களாய் இருந்தனர்.
நன்றி====
புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இறைக்க மிகவும் பழமையான முறையை பின்பற்றி விவசாயம் செய்யும் மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பன் என்ற கருப்பையா(78)
==புகைப்படங்களுக்கு நன்றி ===Subramaniya InfoPlace blog .

நன்றி   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக