கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை காண முடியாத வகையில், தமிழக வரலாற்றில், ஒரு இடம் இன்னும் இருக்கிறது.
1. தன் கொடை சிறப்பு வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதாலா?
2. தன்னடக்கத்தினாலா?
3. வரலாற்று உணர்வு இல்லாததாலா?
4. கட்டுவித்தவரின் பெயர் தெரியாததாலா?
இதில் என்று தெரியவில்லை. தகவலுக்கு வருகிறேன்.
கி.பி.1782 ல் சென்னை ராயபுரத்தில் ஒரு" அன்ன சத்திரம்" இருந்தது .(இருக்கிறது) அது கட்டியவரின் பெயரில் இல்லாது, அவரது தொழிலின் பெயரால்" மணியக்காரர் சத்திரம் " என்று அழைக்கப்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனிக்கும், கர்நாடக ஐதரலிக்கும் நடந்த 2 ஆம் மைசூர் போர் (1780 - 1784) காரணமாக, தமிழ்நாடு சொல்லொணா துன்பங்களுக்கு ஆனானது. போரினாலும், இயற்கை சீற்றத்தினாலும் "கொடிய பஞ்சம்" தலைவிரித்தாடியது.
அப்போது வட சென்னைக்கு தலைவரான "மணியக்காரர்" (பெயர் தெரியவில்லை) கி.பி.1782 ல் "கஞ்சித் தொட்டி" திறந்து, மக்களுக்கு வயிராற ஊற்றினார்.
அந்த இடம் இப்போது வட சென்னையில் ராயபுரத்தில் "ஸ்டான்லி மருத்துவ கல்லூரி" இருந்த இடத்தில் இருந்தது. பஞ்சத்திற்கு 150 வருடங்கட்கு பின்னர், அதை ஏழைகள் வாழும் சத்திரமாக, மணியக்காரர் மாற்றினர். அதன் அருகில் அப்போதைய சென்னை கவர்னர் "ஜார்ஜ் பிரடரிக் ஸ்டான்லி" (1933) இல் தன் பெயரால் மருத்துவமனை கட்டினார். கவர்னர் அச்சத்திரத்தை" மோனிகர் சத்திரம்" என்று அழைத்தார். அதைப்பின் மருத்துவனைக்கு அருகில் இடம்மாற்றினார்.
அதன் பின் பிரிட்டீஷார் பல கட்டிடங்கள் கட்டினர். ஆனால் மணியக்காரர் சத்திரம் மட்டும் இடிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர்.
ஆக மணியக்காரர் சத்திரம் இன்றும் வரலாறு பேசுகிறது.
ஆதாரம்:—இ.ச.க. 6/116.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக