Translate

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வெள்ள நிவாரண நிதி திரட்டுதல்

     நமது வீரப்பாண்டியில் சிறுவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாக வெள்ள நிவாரண நிதி திரட்டியது மனதை நெகிழவைக்கின்றது.


     நமது பரம்பரியமான பழந்தமிழர் நீர் மேலாணமையை சரிவரப் புரிந்து பயன் படுத்திக் கொள்ளாமையே இதற்குக் காரணம்.

     பாரம்பரியமான நீர் மேலாண்மையில் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதிய வழிகாட்டலை உருவாக்குவதே தேவையுமே, காலத்தின் கட்டளையாகி இருக்கின்றது.

சனி, 26 டிசம்பர், 2015

சிவன் கோவில்

     நமது வீரப்பாண்டி 1000 ஆண்டு பாரம்பரியமிக்க சிவன் கோவில் நடராசர் வீதி உலா


திங்கள், 21 டிசம்பர், 2015

பொம்மை

     கையால் ஊசி மூலம் துணிகளை தைத்து அழகிய குதிரை உற்பத்தி செய்தது இதனை ஊர் ஊராகச் சென்று விற்பனையும் செய்யும் பாட்டி இந்தக்குதிரை இவளவு நேர்த்தியாக தைத்து இருப்பது அதிசயம்தான்.





சொர்க வாசல் திறப்பு

     மார்கழியில் நமது வீரப்பாண்டியின் கலிவரத ராசா பெருமாள் கோவில் சொர்க வாசல் திறந்து திருமால் காச்சி அளித்தார்

மார்கழி மாதம் முழுவதும் நமது மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஊரைச் சுற்றி வருவது வழக்கம் இந்த ஆண்டும் நடை பெறுகின்றது.

வியாழன், 26 நவம்பர், 2015

நாட்டு கார்த்தி

     இன்று இரண்டாம் நாள் கார்த்தி இதற்கு இறைவனுக்குப் படைக்கும்போது பூசனி இலையில் தாண்டைப்பார்கள் கார்திக்கு தான் மாளிகைக்கும், கோபுரத்திற்கும், குப்பைமேட்டிற்கும் அகல் விலக்கு வைத்துப் படைப்பார்கள்

பூசனி இலைபடையல்





கார்திசுற்றுதல்



 தீபந்தம்சுற்றுதல்


     இரவு ஆதி பறை மேளம் சூழ ஊரை அண்ணாமலையாரே என்ற சத்தத்தோடு மூன்று முறை வலம் வந்து அக்காதா குளக்கரை மற்று பெரியபாறை இன்றும் சில இடங்களிலும் தீட்டு வைக்கோல் போன்றவை கொளுத்தி படைப்பார்கள்.






புதன், 25 நவம்பர், 2015

கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

   

திருவண்ணாமலை 

     இன்றும் நமது வீரப்பாண்டியில் இருந்துதான் திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் திருவிழாவிற்கு கொடியும் மலை உச்சியில் எரியும் திரியும் எடுத்துச் செல்வது வழக்கம்


வீரப்பாண்டி

     நமது வீரப்பாண்டி பொறையாத்தா மலையில் தீபம் ஏற்றப்பட்டது






     மற்றும் புலிக்கள் எக்கா மலையில் (முருகர் மலை) யிலும் தீபம் ஏற்றப்பட்டது

     

வியாழன், 19 நவம்பர், 2015

கார்த்திகை தீபம்

     நமது வீரப்பாண்டியில் அகல் விலக்கு வியாபாரம் ஆதி தொழில் பாணை செய்தார்கள் இது இன்றைய நிலை? இவர்கள் வீதியில் வியாபாரம் செய்கின்றனர்கள்.


செவ்வாய், 17 நவம்பர், 2015

நமது வீரப்பாண்டி பெரிய ஏரி கோடி போதல்

     வீரப்பாண்டி பெரிய ஏரி கோடி போதல்




 நீர் பிடிப்பு பகுதிகள்




8/11/2015 & 9/11/2015 
23.4 செண்டி மீட்டர் மழை

 15 11/2015 & 16/11/2015
12.2 செண்டுமீட்டர் மழை


செவ்வாய், 10 நவம்பர், 2015

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி மழை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


     8/11/2015  காலை 11.00  முதல் 9/11/2015 இரவு 7.49  வரை நமது வீரப்பாண்டி சிவன் கோவில் அருகே பதிவான மழையின் அளவு  234 மில்லி மீட்டர்
8/11/2015 11:00 முதல்
 7:49     44
 9:10     38
10:45    32
12:10    29
01:33    42
04:50    25
10:00    24

8/11/2015 அதிகாலை முதல் மழை பொழிந்தது



     நமது பெரிய ஏரி தற்பொழுது கடகடப்பான் கல்லை வலைத்து நீர் மட்டம் உயர்ந்து இருக்கும் இது பாதி ஏரி நிரப்பியது.
       





தீபாவளி மழை

8/11/2015  காலை 11.00  முதல் 9/11/2015 காலை 7.49  வரை நமது வீரப்பாண்டி சிவன் கோவில் அருகே பதிவான மழையின் அலவு  44 மில்லி மீட்டர்

வெள்ளி, 23 அக்டோபர், 2015

புதன், 21 அக்டோபர், 2015

இந்து மதப் பாதை மாறுகின்றதா மாற்றப்படுகின்றதா

     இந்துக் கோயிலுக்கு வருகின்றவர்கள். அங்கு மதிக்கப்படுகின்றனர்களா? அல்லது மிதிக்கப்படு கின்றனர்களா?
   முன்பு மன்னர் ஆட்சிக் காலங்களில்  கோயிலுக்கு வருபவர்களை நன்கு மதித்தனர்கள் தற்போது பல ஆலயங்களில் செல்வந்தர் அதிகம் பனம் தருபவர்கள் மட்டும் மிகுதியாக கவணிக்கப்படுகின்றனர்கள் மற்ற மக்களுக்குச் சிகப்பு விபூதி கொடுப்பதை கூடச் சுமையாக கருதுகின்றனர்கள்.

     இதிலும் சிறுவர்கள் மிகுந்த மரியாதை குறைவாகவே நடத்தப்படுகின்றனர்கள்.

     மன்னர் ஆட்சிச் காலத்தில் தானமாகக் கொடுத்த பல ஏக்கர் நிலம் இருக்கும் கோவில்களும் இதே நிலைதான்.

     இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களிலும் நடப்பதுதான் வேதனைக்குரியது. இவற்றின் உச்சக் கட்ட வேதனையானது நமது விழுப்புரம் மாவட்ட ஆசியர் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தின் வாயில் இருக்கும் கணபதி சிலைக்கு உண்டியல் வைத்து இருப்பது தான்.

     இண்றய நிலையில் இந்து கோயில் எண்பது அரசாலும் கோயில் நிர்வாகத்தாலும் இலாப நோக்கமாகவே பார்க்கப்படுகின்றது.

   மற்ற மதங்களில் சர்ச்சிக்கு விடுமுறைபில் செல்லும் குழந்தைகளை விசாரித்ததில் அங்கு அவர்களுக்கு பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் பல  தின்பண்டம் தருவதாக கூறுகின்றனர்கள்

    இந்து மத கோயிலுக்கு வரும் குழந்தைகளின் நிலை எண்ண?

     இளைய சமுதாயம் மற்றும் குழந்தைகள் கடைப்பிடிக்காத பழக்கம் மற்றும் மொழி, மதம் எவ்வளவு பழமை வாய்த்ததாகவும். மேன்மைக்குரியதாகவும் இலக்கிய, இலக்கண நூல்களையும். தொல்லியல் சான்று மற்றும் தொல்யல் எச்சம் இருந்தும் நடை முறையில் இருந்து மறைந்து போய் விட்டது. அறிஞ்சர்கள் கருத்து ஏன் சாதாரண பாமரருக்கும் நன்கு தெரியும் கோயில் நிர்வாகத்திற்குத் தெரியாத காரணம் என்ன அல்லது அலசியதின் விளைவுகளா.

      கோவில்களில் வசுல் வேட்டை வாயில் முதல் கருவறை பல நிலையில் தொடர்கின்றது. இதில் கோயில்கலுக்கு கிளைகள் வேறு தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் இறைவன் இருக்கின்ற இடத்திற்கு நாம் செல்ல வேண்டாமா? இறைவனை நம் இடம் தேடி வரவைப்பது மிகக் கொடுமையான செயல் இச்செயல் நிர்வாகத்தின் இலாப நோக்கம் காட்டுகின்றதே தவிர மதத்தின் உயர்த்த தன்மையை காட்டவில்லை.

     மற்ற மதங்களின் இவ்வாறு டோக்கன் முறை இல்லை டோக்பனுக்கு பணத்தின் மதிப்பிற்கு ஏற்றது போல் இறைவனை காத்திருப்பதும் அருகில் சென்று வணங்கவும் வழி இல்லை இந்து மதத்தில் மட்டும் ஏன் இந்த நிலை?

     சர்சிக்கு செல்பவர் ஒருவரை எனது நண்பர் ஏன் மதம் மாறினாய் என்று விசாரிதுதார் அதற்கு அவர் கூறியது நமது ஆலயத்திற்கு சென்ற உடன் இதற்கு அதற்கு என்று பலவழிகளில் கட்டணம் என்ற பெயரில் பனம் பறிப்பதாகவும் அவ்வாறு இதில் இல்லை என்றார்
     

சனி, 17 அக்டோபர், 2015

வியாழன், 15 அக்டோபர், 2015

அப்துல்கலாம் 84வது பிறந்த நாள்

நமது ராக்கெட் தந்தை திரு அப்துல்கலாம் இவர்களது 84 வது பிறந்த நாள்  நமது வீரப்பாண்டியில். திருக்கோவிலூர் வேட்டாவலம் சாலையில் உள்ள ரம்யா டீகடை அருகில் கொண்டாடப்பட்டது.




செவ்வாய், 13 அக்டோபர், 2015